அருள்மிகு குருசுவாமி திருக்கோவில், பழவிளை
” குருசாமி ஐயா திருவருளால் “

அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22-ம் நாள் (05-05-2023) வெள்ளிக்கிழமை அன்று பழவிளை அருள்மிகு குருசுவாமி திருக்கோவில் சிறப்பு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
சித்திரை 22 (05-05-2023) வெள்ளிக்கிழமை
காலை 5.30 மணி : கணபதி ஹோமம் காலை
8.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம்
காலை 9.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு முதல்கால திருப்பூஜை
மதியம் 12.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு இரண்டாம் கால உச்சிகால பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம், மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும் திருப்பூஜை நடைபெறும்.
மதியம் 1.30 மணி : அன்னதானம்
மாலை 6.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம்
இரவு 7.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு மூன்றாமி கால சிறப்பு பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம். மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும் திருப்பூஜை நடைபெறும்.
சுபம்
கோவில் தொடர்புக்கு 9488759496
கேட்டவர்க்கு கேட்ட வரம் கொடுக்கும் எங்கள் குல தெய்வம் குருசுவாமி ஐயா கோவில் சிறப்பு பூஜை விழாவிற்கு அனைவரையும் வருக வருக வருக என வரவேற்கிறோம்.
” குருசாமி ஐயா திருவருளால்”
நம் குலதெய்வங்களின் ஆசீர்வாதம் மற்றும் நம் முன்னோர்கள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்
வாழ்த்துக்கள் … !
” குருசாமி ஐயா திருவருளால்”
நம் குலதெய்வங்களின் ஆசீர்வாதம் மற்றும் நம் முன்னோர்கள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்