எங்கள் முன்னோர்களின் விபரம்

” குருசாமி ஐயா திருவருளால் “

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகாமையில் பழவிளை கிராமம் அமைந்துள்ளது.

பல நூற்றாண்டு ( சுமார் 250 to 300 வருடங்கள் ) வரலாறு உடைய இந்த ஊரில்  குருசாமி கோவில், பத்ரகாளியம்மன் கோவில் , முத்துபேச்சி அம்மன் கோவில் , மாசாணம் திருக்கோவில், ஆலடி சாஸ்தா திருக்கோவில் அமைந்துள்ளது.

  • சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த எங்கள் முன்னோர்களில்
    வேலாயுத பெருமாள் என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் ((( எங்கள் முன்னோர்கள் கூறியபடி சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதும் பொழுது 40 வயதில் இருந்து 50 வயதுக்குள் இருக்கும் )))   அவர்களால் இயற்றப்பட்ட ( அல்லது ) பாடப்பட்ட குருசுவாமி ஐயா திருக்கதையை எங்கள் முன்னோர்கள் ஓலை சுவடியில் எழுதி வைத்துள்ளனர். அதன் பிரதி ஓலை சுவடி இன்னும் எங்கள் திருக்கோயில் உள்ளது.

இதன் பிரதி ஏடுகள் இன்னும் ஏராளமான ஊர்களில் பரவி கிடக்கிறது.

அப்படி பரவிய ஏடுகளில் பட்டசாலியன்விளை ஊரிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு ஏட்டில் இருந்துமதுரை பல்கலைக்கழகம் தமிழ் துறையைச் சேர்ந்த டி. நடராஜன் ஐயா அவர்கள் 1976 ஆம் வருடம் அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார் ( அன்னாரின் பாதங்களில் எங்கள் நன்றியினை சமர்ப்பிக்கிறோம் ).

 எங்கள் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்ட விவரப்படி இந்த ஏடு எழுதிய வருடம் சிறப்புமிக்க 944 ஆம் தமிழ் ஆண்டு ஆகும். இன்றைய ஆங்கில தேதி படி கிட்டத்தட்ட 254 ஆண்டுகள் ஆகிறது.

ஏட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் தேதியை ஆங்கில தேதியாக மாற்றி நாம் கணக்கிட்டு பார்த்தோம் என்றால்  01.07.1769 ம்  வருடமாகிறது. சனிக்கிழமை ரோகிணி நட்சத்திரம், இரண்டாம் பாதம், திரயோதசி திதியில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி காலை 8.40 க்கு பனை ஓலையில் எழுதப்பட்டிருக்கிறது

சிவபெருமான் குரு தவசி ஐயாவாக மக்களுக்கு நன்மை செய்ய வந்த தெய்வம் என்பதை இந்த சுவடி உணர்த்துகிறது.அதை உணர்ந்து பாடும் பாக்கியத்தை ( எழுதும் ) எங்கள் முன்னோர் வேலாயுத பெருமாள் மைந்தன் சிவசுப்பிரமணியன் பெற்றிருப்பது எங்கள் பாக்கியம்.

( இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து செய்து விட்டோம் ) .

 Kuruswamy Ayya Temple 2

Kuruswamy Ayya Temple 1

1976 ஆம் வருடம் திரு நடராஜன் ஐயா எழுதிய புத்தகத்தின் PDF வடிவம் உங்களுக்கு இந்த வெப்சைட்டில் கொடுத்துள்ளேன் 

(_குருசாமி_கதை PDF)

 படித்து மகிழ்ச்சி அடையவும்.

பழவிளை ஊரில், ஊர் கோயிலாக முத்தாரம்மன் கோயில் திகழ்கிறது.